குகை மனிதனும் கோடி ரூபாயும்
குகை மனிதனும் கோடி ரூபாயும், P. பாலசுப்ரமணி, சந்தியா பதிப்பகம், 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 83, பக்கங்கள் 152, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-807-8.html பணத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைப் பாதுகாப்பதில்தான் நம் பொருளாதார வளர்ச்சியே இருக்கிறது. சிந்திக்காமல் செய்யும் முதலீடுகளால் அசலுக்கே ஆபத்தாய் முடியும். இப்படி பங்குச்சந்தை முதலீடுகள் தொடங்கி, பணத்தினைப் பாதுகாப்பது வரை படிப்பவர்களுக்கும் பாமரர்களுக்கும் விளங்கும் வண்ணம் பல்வேறு விஷயங்களை எளியமுறையில் எடுத்துரைக்கிறது இந்நூல். பணத்தைக் கையாள்வதில் இன்றைய நாகரிக மனிதனிடம்கூட குகை மனிதனின் குணங்களே பொதிந்து கிடக்கின்றன என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறார் ஆசிரியர். தங்கத்தை கிலோ கணக்கில் கழுத்தில் மாட்டிக்கொண்டு திரிவது, திருடனை வீட்டுக்குள் அழைத்து விருந்து வைக்கும் செயல் என்பன போன்ற பொருளாதார எச்சரிக்கையும் உளவியல் சார்ந்த பொருளாதார சிந்தனைகளும் அதிகம். -இரா. மணிகண்டன். நன்றி – குமுதம், 27 பிப்ரவரி 2013. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-799-8.html