பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 100ரூ. இசையே சிவன், சிவனே இசை என்ற சுந்தரர் வாக்குப்படி இசைஞானி சிவஞானி ஆகியிருக்கிறார். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என மாணிக்கவாசருக்கு சிவன் ஆணையிட்டதுபோல், பாவைப் பாடல்கள் பாடிய வாயால் திருப்பள்ளி எழுச்சியையும் பாடவைத்திருக்கிறார். பாவைப் பாடல்கள் 20, திருப்பள்ளி எழுச்சி 10 என்று இசைஞானி அருளியதை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது பெருமை. பாவைப் பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ்பாடி அருள்பெற […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more

இசைஞானி இளையராஜாவின் பால் நிலாப்பாதை

பால் நிலாப்பாதை, இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், பக். 208, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-373-6.html திரையுலகில் இசைஞானியின் வெற்றிகளும், சாதனைகளும் அற்புதமானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவருடைய வாழ்க்கைப் பயணம், கிராமத்துப் புழுதி மண்ணில் துவங்கி, உலகெங்கிலும் சுற்றி வருகிறது. அவரது இசைப் புகழோ ககனப் பெருவெளியெங்கும் காற்றுப் போல பரவி, வியாபித்திருக்கிறது. வாழக்கை, தொழில் சார்ந்த அனுபவங்களைத் தாண்டி அவருடைய ஆன்மிக அனுபவங்களும், நம்மை அவரருகே கொண்டு வந்து நிறுத்தி, அவரை அண்ணாந்து பார்க்க […]

Read more