வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்
வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 230ரூ.
மகாபாரதத்தை எழுதிய வியாசர், ஏராளமான கிளைக் கதைகளைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற மிகப் பெரிய நூலையும் எழுதியுள்ளார். அந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், கிளைக் கதைகளும் எளிய முறையில் படித்து அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
காக்கும் கடவுளான விஷ்ணு அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக எடுத்த 20-க்கும் மேற்பட்ட அவதாரங்களும், அந்த அவதாரங்களின் சிறப்பும், அதன் மூலம் வெளிப்பட்ட அறநெறிகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சிருஷ்டி ரகசியம், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, காலத்தின் கண்க்கீட்டு முறை போன்ற விவரங்களையும் இந்த நூலில் காணலாம்.
நன்றி : தினத்தந்தி, 31/10/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818