சேக்கிழாரின் பெரிய புராணம்
சேக்கிழாரின் பெரிய புராணம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா, விலை 360ரூ.
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னரிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார், 63 நாயன்மார்கள் தொடர்பான செய்திகளை பல்வேறு தரவுகள் மூலம் சேகரித்து, அவர்களின் வரலாற்றை பெரியபுராணம் என்ற நூலாக ஆக்கினார். பகவான் ரமணரின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய, 63 நாயன்மார்களின் வரலாறு, எளிய தமிழில் உரைநடை வடிவத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
நாயன்மார்களுக்கு அருள் புரிய அந்த இறைவன், சாதாரண வடிவத்தில் வந்து, அவர்கள் பெருமைகளை உலகறியச் செய்த வரலாறுகள் இலக்கியத்தரத்துடனும் மனதை ஈர்க்கும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
நாயன்மார்கள் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் பற்றிய தகவல்களை, ஆன்மிக வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் தந்து இருப்பது சிறப்பு.
நன்றி : தினத்தந்தி, 19/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031641_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818