விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி
விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை 400ரூ.

1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஊடகம், திரைப்படம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், கடித இலக்கியம், நூல் பதிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வளர்ச்சி, அவை தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ஊடகத் துறை வளர்ச்சிப் பகுதியில் 1942-ஆம் ஆண்டு தினத்தந்தி தொடங்கப்பட்டது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியின்போது தியாகபூமி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், அந்தத் தடை அமுலுககு வருவதற்கு முன்னதாக 3 நாட்கள் 24 மணி நேரமும் அந்தப் படம் சென்னை கெயிட்டி திரையரங்கில் இலவசமாகக் காட்டப்பட்டது என்பது போன்ற வியப்பான தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது.
நன்றி : தினத்தந்தி, 19/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031642_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818