திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more