மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன்; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்; விலை:ரூ.200; மாமல்லபுரம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருந்தாலும், சுவாரசியமான ஆய்வுத் தகவல்களோடு, தொடர்கதைக்கே உரித்தான விறுவிறுப்போடு, ஆங்காங்கே பொருத்தமான படங்களைச் சேர்த்து, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டும் சுகானுபவங்களோடு வந்திருக்கும் இந்தப் புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. ஆசிரியர், மாமல்லபுரம் கடற்கரை பற்றிய வர்ணனைகளோடு புத்தகத்தைத் தொடங்கி இருப்பதே தனி அழகு. மாமல்லபுரம் சிற்பங்களில் புதைந்துள்ள புதிர்களை வரலாற்றுப் பின்னணியோடும், பக்தி இலக்கியங்களோடும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம், மாமல்லபுரம் கடலில் மூழ்கிய […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200 மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு […]

Read more