மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்
மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன்; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்; விலை:ரூ.200;
மாமல்லபுரம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருந்தாலும், சுவாரசியமான ஆய்வுத் தகவல்களோடு, தொடர்கதைக்கே உரித்தான விறுவிறுப்போடு, ஆங்காங்கே பொருத்தமான படங்களைச் சேர்த்து, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டும் சுகானுபவங்களோடு வந்திருக்கும் இந்தப் புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது.
ஆசிரியர், மாமல்லபுரம் கடற்கரை பற்றிய வர்ணனைகளோடு புத்தகத்தைத் தொடங்கி இருப்பதே தனி அழகு. மாமல்லபுரம் சிற்பங்களில் புதைந்துள்ள புதிர்களை வரலாற்றுப் பின்னணியோடும், பக்தி இலக்கியங்களோடும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம், மாமல்லபுரம் கடலில் மூழ்கிய கோபுரம் தொடர்பாக ஆங்கிலேயக் கவிஞர் எழுதிய காப்பியத்தில் இருந்து ஒரு கவிதையை பொருத்தி இருக்கிற நுணுக்கம் போன்றவை இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க வகை செய்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 20/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818