1877 தாது வருடப் பஞ்சம்
1877 தாது வருடப் பஞ்சம், ஆசிரியர்: வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்; விலை:ரூ.250.
தமிழக வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய 1877-ம் ஆண்டு பஞ்சத்தின்போது மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் – அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பவை இந்த நூலில் பதிவு செய்யப் பட்டு இருக்கின்றன. அப்போது சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர், அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் தந்து இருப்பதன் மூலம், பஞ்சத்தின் அவல நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டி இருக்கிறார்.
சில ஆங்கிலேய அதிகாரிகள் நடந்துகொண்ட விதத்தையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். 1877-ம் ஆண்டு பஞ்சம் இந்த நூலில் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நன்றி: தினதந்தி, 20/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958078/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818