மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200 மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு […]

Read more

மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்

மருதநாயகம் என்ற மர்ம நாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், பக்.336, விலை ரூ.300. மருத நாயகத்தின் 39 வருட வாழ்க்கையை பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தேதி வாரியாக விரிவாக அலசுகிறது இந்நூல். மருதநாயகம் இந்துவா, இஸ்லாமியரா அல்லது இந்துவாகப் பிறந்து இஸ்லாத்துக்கு மாறினாரா என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அதுபோன்றேஅவர் ஆங்கிலேயர்களை தமிழக மண்ணில் வேரூன்ற வழிவகை செய்தாரா அல்லது விடுதலை வீரரா என்பதை வாசகர்களின் முடிவுக்கு நூலாசிரியர் விட்டுவிடுகிறார். 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர், ஜமீன்தார், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு முக்கிய […]

Read more

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம், அதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், தினத்தந்தி பதிப்பகம், பக்.272, விலை ரூ.150. கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் […]

Read more

கலாம் ஒரு சரித்திரம்

கலாம் ஒரு சரித்திரம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 180ரூ. மக்களின் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், இளைஞர்களின் வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்ச, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. இன்னொரு மகாத்மாவாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் […]

Read more

ஆயிரம் ஆண்டு ரகசியம்

ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் […]

Read more