மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம்

மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம், ஆர்.வி. பதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியில் இருக்கிறது; மக்களின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு தரப்படும் சமமான வாய்ப்புகளில் இருக்கிறது. அப்படி சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக அம்மக்களை உயர்த்த பாடுபட்டவர் தான், கேரளத்தில் செம்பழந்தியில் அவதரித்த ஸ்ரீ நாராயண குரு. ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம். மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் […]

Read more

பாரிஜாத்

பாரிஜாத், நாசிரா ஷர்மா, சாகித்ய அகடமி, விலைரூ.1150. சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத் அலகாபாதில் உள்ள பங்களாவை விற்றதிலிருந்து துவங்கி, அதை குடும்ப உறுப்பினர்கள் மீட்டெடுப்பது வரை பல நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் சொல்லப் பட்டிருக்கின்றன. ‘வாழ்வும் மரணமும் மேலே இருக்கும் இறைவனின் கைகளில் அல்லவோ இருக்கிறது’ என்று நினைப்பவளின் வாழ்க்கைப் போராட்டம் கதைப்பின்னலுக்குத் துணை செய்கிறது. முக்கிய பாத்திரங்களான நிகில், மைக்கேல், காசிம், பிர்தெளஸ் ஜஹான், எலேசன், ஷோபா […]

Read more

தெய்வம் நின்று கொல்லும்!

தெய்வம் நின்று கொல்லும்!, கவிமாமணி அழகு சக்தி குமரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய் பேசி நடிக்கும் காட்சியை காட்டும் சிறுகதை, நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற திருக்குறள் கருத்தோடு கதை முடிகிறது. ஊரார் பணத்தைக் கொள்ளையடித்தவன் விபத்தில் மாட்டி மாய்கிறான் என்ற கருத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பாதை தவறிய சிறுவனை நல்வழிப்படுத்திய பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற சிறுகதை, […]

Read more

காந்தியின் பொம்மை

காந்தியின் பொம்மை, குறிஞ்சி ஞான.வைத்தியநாதன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்து, தீயவற்றை விலக்கி, எதிர்த்து போராட துாண்டும் நாவல். பள்ளி நண்பர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, வழியில் ஒரு கிளியை பாம்பு சாப்பிட முயல்வதை பார்க்கின்றனர். பாம்பிடம் இருந்து கிளியை காப்பாற்றி, பள்ளி நோக்கி புறப்பட்டால் நேரம் கடந்து விடுகிறது. தலைமையாசிரியரின் அன்பை பெறுகின்றனர். ஒரு கொலையை பார்த்தால் சிறுவர்களுக்கும் ஏற்படும் அச்சம், விசாரணை, போராட்ட குணம் என பரபரப்பாக செல்கிறது. – ராயன் நன்றி: […]

Read more

அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75. புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120. புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள். புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து […]

Read more

அறிவு

அறிவு, ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு, ஆங்கில மொழியாக்கமும் உரையும்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன், தன்னறம் வெளியீடு, விலை: ரூ.80. நவீன இந்தியாவின் முக்கியமான சீர்திருத்தவாதியும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் […]

Read more

மணிமேகலை

மணிமேகலை, (முதல் பாகம்), உரை: கரு.முத்தய்யா, விலை: ரூ.300. தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் 31 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான முனைவர் கரு.முத்தய்யா தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு எழுதிய உரைநூல். நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2, ஜே.வி.நாதன், அந்தரி பதிப்பகம், விலை: ரூ.300 மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.நாதன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ விருதை ஜே.வி.நாதன் மூன்று முறை பெற்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான மௌனியைப் பற்றி ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, சிநேகிதி, குமுதம் பக்தி […]

Read more
1 2 3 4 9