அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130. வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது. மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை […]

Read more