அபிதா
அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60.
காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது.
வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால்.
– மலர்
நன்றி: தினமலர், 30/1/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818