அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

நேருவின் வாழ்க்கை

நேருவின் வாழ்க்கை, தி.ஜ.ரங்கநாதன், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.150. மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பல்வேறு ஆங்கில புத்தகங்கள், நேரு எழுதிய புத்தகங்களின் துணை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை, 43 இயல்களாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது. எளிய மொழி, தடங்கலற்ற வாசிப்பை தருகிறது. இறுதியாக நேரு எழுதிய உயில் வாசகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அது நெகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தியா மீது நேரு கொண்டிருந்த பற்றையும், வளர்ச்சியில் செலுத்திய உழைப்பையும், அவரது வாழ்க்கை மாண்பையும் தெரிவிக்கிறது. படிக்க வேண்டிய வாழ்க்கை […]

Read more

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும், நா.பார்த்தசாரதி, அர்ஜித் பதிப்பகம், பக். 192, விலை 105ரூ. சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை என்பார் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய, 33 கட்டுரைகள் நுாலை அலங்கரிக்கின்றன. சமூகப் பொறுப்பு இல்லாத ஆட்சியாளர், சுயநலம் மிக்க அரசியல்வாதி, பொது நன்மை நோக்காத மக்களின் செயல்கள், நாட்டை எவ்வாறு கேட்டில் நிறுத்துகின்றன என்பதை முத்தாய்ப்பாக எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு, பேரறிஞர் அண்ணா, அர்ஜித் பதிப்பகம், விலை 110ரூ. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பரிசு என்ற தலைப்பு கொண்ட இந்தத் தொகுப்பில் அண்ணா எழுதிய 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் அண்ணாவின் சமூகக் கண்ணோட்டத்தைக் காண முடிகிறது. தவளையும் மனிதனும் என்ற கதை போன்ற சில கதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்து இருக்கின்றன. அண்ணாவின் எளிய நடை, புத்தகத்தில் உள்ள அனைத்துக் […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், அர்ஜித் பதிப்பகம், விலை 460ரூ. பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும், உரைநடைகளிலும் உள்ள கடினமான சொற்களுக்குப் பொருள் தெரியாமல் இனியும் அவதிப்படத் தேவை இல்லை என்ற நிலையை இந்தப் புத்தகம் தருகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படி ஆவணப்படுத்தி அந்தச் சொற்களுக்கு எளிய விளக்கத்தை இந்த நூல் தருகிறது. நல்ல வழிகாட்டி போல அமைந்து இருப்பதால், இந்த நூல், பழைய இலக்கியங்களைப் பொருள் உணர்ந்து படிக்க மிக்க பயன் உள்ளதாக இருக்கும். […]

Read more

தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more