தமிழ் இலக்கிய அகராதி
தமிழ் இலக்கிய அகராதி, பாலுார் கண்ணப்ப முதலியார், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.625 பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி நுால். பழந்தமிழ் இலக்கிய சொற்களை, புரிந்து பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய மொழிக்கு மட்டுமின்றி, வழக்கு மொழிக்கான பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சொல்லகராதியாக மட்டுமின்றி, தொகை சொற்கள், தொடர் மொழி விளக்கங்கள், பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நுால், புலவர்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. பழந்தமிழ் நுால்கள் பற்றியும், அவற்றை இயற்றியவர் பற்றி அறியவும் உதவும். […]
Read more