தமிழ் இலக்கிய அகராதி
தமிழ் இலக்கிய அகராதி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 350ரூ.
இது புதுமையான முறையில் எழுதப்பட்ட பயனுள்ள அகராதி. முன் பகுதியில் இலக்கிய நூல்களில் காணப்படும் கடினமான சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களை பிறர் உதவியின்றி தாங்களே கற்க உதவும். பின்னர் இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்களும், அதன்பின் தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி, தமிழ் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பயன்படும். தமிழறிஞர் கண்ணப்ப முதலியார் எழுதிய இப்புத்தகம் நீண்ட இடைவெளிக்குப்பின் சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது.
—-
அக்குபஞ்சர் மருத்துவமும் உணவு முறையும், டாக்டர் கனகதுர்காலட்சுமி, 31/107, ஜவஹர் மைதானம், 2வது தெரு, ராஜபாளையம் 626117,விலை 250ரூ.
நமது நாட்டின் பாரம்பரிய சொத்தான அக்குபஞ்சர் என்னும் அருங்கலையைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது இந்நூல். மற்ற மருத்துவம் நோய்க்கு சிகிச்சை செய்யவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அக்குபஞ்சர் மருத்துவ முறையில் நோய்க்கான காரணத்தை அறிந்து அக்காரணத்திற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் வருவதற்கான காரணங்களில் உணவும், உணவுமுறைகளும் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதையும், அந்நோய்க்கு தீர்வு காண வித்தியாசமான முறையில், எளிமையான நடையில், அதிகமான படங்களுடன் அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி விளக்கியுள்ளார் டாக்டர் கனதகதுர்க்காலட்சுமி.
—-
முன்னூர் ஆடவல்லீசுவரர் அருளாளப் பெருமாள் திருக்கோயில் வரலாறு, கோதனம் பதிப்பகம், 2/39, கங்கையம்மன் கோயில் தெரு, இலட்சமி நகர், வண்டலூர், சென்னை 48, விலை 150ரூ.
திண்டிவனத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முன்னூர். அங்குள்ள ஆடலீசுவரர் அருளாளப் பெருமாள் திருக்கோவில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்தக் கோவிலின் சிறப்பை சிறந்த முறையில் எழுதியுள்ளார் கோ. உத்திராடம். வண்ணப்படங்கள் நிறைந்த அழகிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.