ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this book online –www.nhm.in/shop/100-00-0001-498-6.html

சர்வாதிகாரத்தின் மறுபெயர் அடால்ப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், 2ம் உலகப்போருக்கே வித்திட்டதுடன் கோடிக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கினார். அந்த மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடூர மறுபக்கம் இந்த புத்தகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் பட்ட துன்பங்கள், அவரின் உத்தரவுப்படி ஜெர்மன் அதிகாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்கள், ஜெர்மன் டாக்டர்கள் தங்கள் ஆய்வுக்கூடங்களில் புதிய மருந்தை பரிசோதிக்க கூட யூதர்களை பயன்படுத்திய கொடூரம் போன்ற கோர சம்பவங்கள் இந்த நூலில் பட்டியலிட்டு உள்ளன. ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களுடன் அவரது ரத்த வெறி செய்கைக்கு காரணம் என்ன என்ற மனோதத்துவ விளக்கங்களும் படிக்க வியப்பூட்டுகின்றன.  

—-

 

தமிழ் கல்வெட்டுக்களில் அறிவியல் கோட்பாடுகள், கா. அரங்கசாமி, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, விலை 125ரூ.

தமிழகத்தின் பல இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் அறவியல் கோட்பாடுகளை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது. பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளை தேடிப்பிடித்து ஆராய்ந்துள்ள ஆசிரியர் தனது ஆய்வு முடிவுகளை புத்தகமாக தொகுத்துள்ளார். பண்டைய தமிழர்களின் அறிவியல் வரலாற்றை அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.  

—-

 

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், முனைவர் துரை.மணிகண்டன், த. வானதி, கமலினி பதிப்பகம், கச்சமங்கலம் அஞ்சல், தோகூர் வழி, தஞ்சை மாவட்டம் 613102, விலை 150ரூ.

கணிப்பொறியின் வரலாறு, அச்சுப்பதிப்பு பரிமாற்றம், இணையப் பயன்பாடுகள் பற்றி விவரமாக குறிப்பிட்டப்பட்டுள்ளன. இணைய தளத்தின் பயன்கள், பயன்படுத்தும் விதம், தமிழில் கையாளும்விதம் என ஏராளமான குறிப்புகள் உள்ளன. கணிப்பொறியை இயக்கவும், இணையதளத்தை பயன்படுத்தவும் முழுமையாக அறிந்து கொள்ள இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *