மாமன்னன் ராஜராஜன்
மாமன்னன் ராஜராஜன், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-5.html
தமிழ் மன்னர்களில் பல சிறப்புகளைப் பெற்றவர் அருண்மொழி வர்மர் என்ற இயற்பெயர் கொண்ட ராஜாஜி சோழன். நிர்வாகத்தில் அறிவாற்றலைப் புகுத்தி, வீரத்தை வெற்றிகளாக்கி, உலகம் முழுவதும் சோழரின் புலிக்கொடியைப் பறக்கவிட்டு, இன்றும் விஞ்ஞானிகளையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் வியக்கச் செய்து கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்ட கட்டிடப்பணி என்று எத்தனையோ சாதனைகளைச் சாதித்துக்காட்டிய ஒப்பற்ற மாமன்னன் ராஜராஜன் பற்றி தெரிந்து கொள்ள உதவும் நூல்.
—-
உத்திரகாலாம்ருதம், ஆர்.எஸ்.ராவ், பா.ல.அர்த்தநாரீஸ்வரன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ.
400 வருடங்களுக்கு முந்திய பழமையான ஜோதிட நூல், இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. ஜோதிடம் பற்றிய பல நுட்பமான விஷயங்களை இந்த நூலில் அறிய முடிகிறது. மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி, ரமண மகரிஷி, ஹிட்லர், அக்பர் போன்றோரின் ஜாதகங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது ஒரு விசேஷ அம்சம்.
—-
ம.பொ.சி.யின் கட்டுரைக் களஞ்சியம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதி, தமிழ் முரசு, செங்கோல், தமிழன்குரல், ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். இன உணர்ச்சி வேண்டும் என்ற கட்டுரையில் இன உணர்ச்சி, தேசியத்திற்கு எதிரானது அல்ல என்பதை விளக்குகிறார். தமிழர் கலாசாரம் கட்டுரையில், தமிழருடைய கலாசாரத்தை சங்க இலக்கியங்களில் காணமுடியும். சமய இலக்கியங்களில் காண முடியாது என்று பேசுகின்றனர். இது தவறு என்று திரிபுவாதத்தை மறுத்துள்ளார். இதேபோல் கலாசார வேற்றுமை, பண்டிகையையும் பொருளாதாரமும், தமிழில் அர்ச்சனை, புரட்சித்திருநாள், பாட்டாளித் தமிழா கேள் முதலான கட்டுரைகளில் தமது சுயசிந்தனையும், கொள்கைகளையும் விளக்கியுள்ளார் ம.பொ.சி. அவருடைய எழுத்துக்கள், சிந்தனைகள் காலத்தை வென்று வாழக்கூடியவை என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. நன்றி: தினத்தந்தி, 13/11/2013.