கல்கி தீபாவளி மலர்
கல்கி தீபாவளி மலர், பக். 276, விலை 120ரூ.
காஞ்சி மகா பெரியவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை புருஷார்த்தங்களைப் பற்றி விளக்கி அருளாசியும் வழங்கியுள்ளார். அட்டைப் படத்துக்குத் தக்க கல்யாணபுரம் ஆர். ஆராவமுதனின் சொல்லின் செல்வன் சிறப்புக் கட்டுரையும், அக்கட்டுரைக்கான அமர்க்களமான ஓவியர் வேதாவின் கைவண்ணமும் மலருக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஓவியர் கே.என். ராமச்சந்திரன், ம.செ. ஆகியோரின் ஓவியங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பேசிவிடுகின்றன. புதுகையிலிருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள திருமயம் கோட்டைக்கே நம்மை அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டிவிடுகிறார் சுப்ர.பாலன். நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை பல புலவர்கள் காவேரியைப் புகழ்ந்து பாடிய பாடல்களுடன் இலக்கிய நயத்துடன் வழிந்தோடுகிறது. நன்றி: தினமணி, 26/11/12.
—-
மாடு வளர்ப்பும் மாட்டுப் பண்ணையும், பால் வளமும் பணப்பெருக்கமும், டாக்டர் பா. சரவணகுமார், கங்காராணி பதிப்பகம், பக். 128, பக், 112, விலை 75ரூ, விலை 65ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-644-5.html
மாடு வளர்ப்பு நீண்ட காலமாக உள்ள தொழில். இப்போது பால் தரும் கறவை மாடுகள், குடும்பங்களுக்கு பொருளாதார வளம் சேர்க்கும் வகையில் உள்ளன. மாடு வளர்ப்பில் உள்ள அனைத்துவித அம்சங்களையும் அழகாக ஆசிரியர் விளக்குகிறார். கறவை மாடுகளுக்கு புதிய முறையில் சத்துமிகுந்த தீவனம் தயாரிப்பு, பால்மாடுகள், கன்றுகளை பராமரிக்கும் வழிகள் சிறப்பாக பால்வளமும் பணப்பெருக்கமும் என்ற நூலில் தரப்பட்டிருக்கின்றன. பால் மூலம் தயாரிக்கப்படும் சில உணவுத் தயாரிப்புகள் பால் பொருட்களை மதிப்பு மிக்கதாக்கும் வழிகள், அதற்கான நடைமுறைகள் ஆகியவை இந்த நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 27/10/2013.