ஊடகவியல்

ஊடகவியல், துரை. மணிகண்டன், கமலினி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும், இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது. இந்நுாலில், ஊடகம் குறித்த விளக்கங்களும் சிறப்பாக உள்ளன. வானொலி குறித்தும், தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது. இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி எனப் பல […]

Read more

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரை மணிகண்டன், கமலினி பதிப்பகம், விலை 230ரூ. இந்நூல் கணினி, இணையம் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து உரைக்கிறது. இதனுள், ஐந்து அலகுகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. முதல் மூன்று அலகுகளில், கணினியின் தோற்றம், வரலாறு, கணினியின் அமைப்பு-வகைகள், வன்பொருள்-மென்பொருள் விளக்கம், உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, ஒளிப்பேனா, சுட்டி, பந்துருளை, தொடுசுட்டி, வருடி முதலிய உள்ளீட்டுக் கருவிகளின் விளக்கம். மற்றும் திரை, அச்சுப்பொறி, அச்சுப்பொறி வகைகள், ஒலிபெருக்கி, ஒளிபெருக்கி ஆகிய வெளியீட்டுக் கருவிகளின் விளக்கம், […]

Read more

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this book online –www.nhm.in/shop/100-00-0001-498-6.html சர்வாதிகாரத்தின் மறுபெயர் அடால்ப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், 2ம் உலகப்போருக்கே வித்திட்டதுடன் கோடிக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கினார். அந்த மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடூர மறுபக்கம் இந்த புத்தகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் பட்ட துன்பங்கள், அவரின் உத்தரவுப்படி ஜெர்மன் அதிகாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்கள், ஜெர்மன் டாக்டர்கள் தங்கள் ஆய்வுக்கூடங்களில் […]

Read more