திரை இசை மும்மூர்த்திகள்

திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ்.மணியன், வைகுந்த் பதிப்பகம், விலை 325ரூ.   தமிழ்த் திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய மும்மூர்த்திகளின் வாழ்க்கைக் குறிப்பு, திரை உலகில் அவர்கள் சாதித்த சாதனைகள் மிக விரிவாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. மூவரும் தங்கள் தொழிலில் சரிவு ஏற்பட்டபோது துவண்டுவிடாமல் நிமிர்ந்து நின்று வாழ்ந்து காட்டிய வரலாறு வியப்பளிக்கிறது. தமிழ் சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரையும் இந்த நூல் கவரும். நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031453_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950 ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம். 12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா […]

Read more

சிவஞான முனிவர்

சிவஞான முனிவர், கா.சுப்பிரமணிய பிள்ளை, வைகுந்த் பதிப்பகம், விலைரூ.70. ‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற நுால்களைக் கற்றுணர்ந்த முனிவர் தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளில், ‘ஆனந்த ருத்ரேசுவரர் பதிகம், செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம், பஞ்சாக்கரமாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை, சித்தாந்தப் பிரகாசிகை’ உள்ளிட்ட பல நுால்கள் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.பல சுவையான கருத்துகளையும், அரிய தகவல்களையும் உள்ளடக்கிய நுால்; ஆய்வு நோக்கில் படிக்கலாம். – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், 21-2-21 இந்தப் புத்தகத்தை […]

Read more

திரை இசை மும்மூர்த்திகள்

திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ்.மணியன், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.325. திரை இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன் பற்றிய தொகுப்பு நுால். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நடித்த மீரா திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன்.பட்டினத்தார் நாடகத்தில் நடிக்கத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு, நள தமயந்தி என்னும் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதில், கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் தான், எஸ்.வி.வெங்கட்ராமனை இசையமைப்பாளராகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். பரசுராமன் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பி.ஆர்.சுப்பராமன். பாடகர்கள் கண்டசாலா, பி.லீலா, இசையமைப்பாளர்கள் […]

Read more

ஒரு மோகினியின் கதை

ஒரு மோகினியின் கதை, பூவை.எஸ்.ஆறுமுகம், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.110 பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன. சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது. ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது. சில […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலுார் கண்ணப்ப முதலியார், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.625 பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி நுால். பழந்தமிழ் இலக்கிய சொற்களை, புரிந்து பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய மொழிக்கு மட்டுமின்றி, வழக்கு மொழிக்கான பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சொல்லகராதியாக மட்டுமின்றி, தொகை சொற்கள், தொடர் மொழி விளக்கங்கள், பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நுால், புலவர்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. பழந்தமிழ் நுால்கள் பற்றியும், அவற்றை இயற்றியவர் பற்றி அறியவும் உதவும். […]

Read more

கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள், பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக். 448, விலை ரூ.450. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ள 81 திரைப்படங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் இந்நூல். எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். 2 படங்கள் (ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன்), சிவாஜியுடன் 16 படங்கள், ஜெமினியுடன் 2 படங்கள் (குலவிளக்கு, வைராக்கியம்), விஜயகுமாரியுடன் 32 படங்கள் மற்றும் முத்துராமன், பிரேம் நஸீர் உடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன் போன்றவர்களின் முதல் பட நாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார். அவர் இயக்கி நடித்த […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கை வரலாறு, சாமி.சிதம்பரனார், வைகுந்த் பதிப்பகம், விலை 115ரூ. தந்தை ஈ.வே.ரா. பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரைத் தூற்றியவர்கள் கூட இப்போது போற்றுகிறார்கள் என்ற உன்னத நிலையைப் பெரியார் அடைந்தது எவ்வாறு என்பதைத் தற்கால சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் அவரது விரிவான வாழ்க்கை வரலாற்று நூலாக இது அமைந்து இருக்கிறது. அவர் மதப் புரட்சிக்காரராகவும், அரசியல் புரட்சிக்காரராகவும் இருக் கவேண்டிய அவசியம் ஏற்பட்டது எதனால் என்ற வரலாற்றுத் தகவல் இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. பெரியார் வாழ்வில் நடைபெற்ற […]

Read more