கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more