திரை உலகில் செல்வி ஜெயலலிதா
திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950
ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம்.
12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா தனது முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்புகள் குறைவுதான்.
ஆனால், தான் நடித்த எல்லாப் படங்களிலும் தனது பாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர் அவர். நடிப்போடு தெளிவான வசன உச்சரிப்பும் நாட்டியப் பயிற்சியும் அவரைத் தனித்துக்காட்டின. ஜெயலலிதா தமிழில் நடித்த 87 திரைப்படங்கள் குறித்த முழுமையான தகவல்களைக் கதைச் சுருக்கத்தோடு தொகுத்துத் தந்திருக்கிறார் திரைப்பட ஆய்வாளரான பொன்.செல்லமுத்து. தமிழ் சினிமா தொடர்பாக அவர் எழுதியிருக்கும் 30-வது நூல் இது.
நன்றி: தமிழ் இந்து,16/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818