தமிழில் சிறுபத்திரிகைகள்
தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ.
சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள இந்தப்புத்தகம் படிக்க சுவையுடன் அமைந்திருப்பதில் வியப்பு இல்லை. இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பத்திரிகை நடத்தி, சொத்து சுகங்களை இழந்தவர்கள் பற்றியும் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு, முரளிகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக்கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளை பயன்படுத்தி எவ்வாறு உடலின் புறஅழகு, அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து பயனுள்ள தகவல்கள் அடங்கிய பெட்டகமாகும். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.