தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 150ரூ. கட்டுரைகள், பல வகையாய் அமையும். அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள். இந்த நூலில் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி, வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் சொல்லோவியம் வரைந்துள்ளார் மாரி செல்வராஜ். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- நெடுநல் சுடர், கவிஞர் பாராள்வோன், முகிலரசி வெளியீடு, ஆர்க்காடு, விலை 85ரூ. பெற்றோர் பாசம், காதல் நேசம், நேர்மை, நல்லொழுக்கம், சமுதாய அலசல், சுற்றுச்சூழல், தாய்மை என பல்வேறு பிரிவுகளை […]

Read more