மறக்கவே நினைக்கிறேன்
மறக்கவே நினைக்கிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 150ரூ.
கட்டுரைகள், பல வகையாய் அமையும். அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள். இந்த நூலில் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி, வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் சொல்லோவியம் வரைந்துள்ளார் மாரி செல்வராஜ். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/4/204.
—-
நெடுநல் சுடர், கவிஞர் பாராள்வோன், முகிலரசி வெளியீடு, ஆர்க்காடு, விலை 85ரூ.
பெற்றோர் பாசம், காதல் நேசம், நேர்மை, நல்லொழுக்கம், சமுதாய அலசல், சுற்றுச்சூழல், தாய்மை என பல்வேறு பிரிவுகளை அலசும் கவிதைத் தொகுப்பான இந்நூல் படிப்பதற்கு சுவையானது. நன்றி: தினத்தந்தி, 2/4/204.
—-
முதல் மாற்றம், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 50ரூ.
பாவேந்தர் பாரதிதாசனின் ஆத்திசூடி கருத்தை மையமாக வைத்து நூலாசிரியர் பாவலர் மலரடியான் 7 தலைப்புகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூலாகும். இக்கதைகள் அனைத்து தரப்பினரையும் படிக்கத் தூண்டுவதுடன், சிந்திக்கவும் தூண்டுகின்றன. அதேபோல் பாரதிதாசனின் ஆத்திச்சூடி கருத்தை வைத்து மலரடியான் தொகுத்துள்ள மற்றொரு நூல் வெற்றியின் முகவரி. விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 2/4/204.