பகல் கனவு
பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130.
வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது.
மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான கதைகளின் தொகுப்பு நுால்.
– மலர்
நன்றி: தினமலர், 9/1/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818