திருவடி முதல் திருமுடி வரை
திருவடி முதல் திருமுடி வரை, அருண் சரண்யா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160
புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டாம். திருவடி முதல், திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன.
சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை உணர்த்துவதற்காக வயிற்று வலி நாடகமாடிய பெருமாள், பாவாஜி என்ற பக்தருடன் தாயக்கட்டை ஆடிய அழகு, வாயால் அதிசயம் செய்த கண்ணன், வாயால் கெட்ட கைகேயி.
மாயூரத்தில் முனிவரின் கை நீளாத அதிசயம், பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் கிழவிக்காக மண் சுமக்க வந்த ஈசனின் கருணை, முதுகில் பிரம்படி பட்ட பேரன்பு, திருவாலங்காட்டில் நடனமாடும் போது காலால் காது குண்டலத்தை எடுத்த சிவபெருமானின் லீலையை, திருமயிலையில் தறி நெய்தவாறு மனக்கண்ணால் கண்ட திருவள்ளுவர்.
தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் தேவை தான். ஆனால், எதற்காக அந்த தேவை என்பதை விளக்குமிடம் அருமை. இதையெல்லாம் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர், 9/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818