பகல் கனவு

பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130. வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது. மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச.ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலை 130ரூ. பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகளின் இந்தத் தொகுப்பு, கடலில் மூழ்கித் தேடிச் சேகரித்த முத்துக்களால் கோர்த்த மாலையாக ஜொலிக்கிறது. இவற்றில் உள்ள பெரும்பாலான கதைகளின் முக்கிய கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக் குவியலில் நாம் கரைந்து விடுவது போன்ற பரவசம், அந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது. அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்கனவே நடந்த, அல்லது நடக்க இருக்கின்ற சம்பவங்களால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more