பகல் கனவு
பகல் கனவு, லா.ச.ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலை 130ரூ.
பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய சிறுகதைகளின் இந்தத் தொகுப்பு, கடலில் மூழ்கித் தேடிச் சேகரித்த முத்துக்களால் கோர்த்த மாலையாக ஜொலிக்கிறது. இவற்றில் உள்ள பெரும்பாலான கதைகளின் முக்கிய கதாபாத்திரம் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதுபோல கதை அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக் குவியலில் நாம் கரைந்து விடுவது போன்ற பரவசம், அந்தக் கதையைப் படிக்கும்போது ஏற்படுகிறது.
அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளும், ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்கனவே நடந்த, அல்லது நடக்க இருக்கின்ற சம்பவங்களால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதற்காக வலிந்து எழுதப்பட்ட வார்த்தை ஜாலங்கள் இந்தக் கதைகளில் இல்லை. ஆனால், நிஜ வாழ்வின் எண்ணச் சிதறல்கள் அப்படியே வடித்து தரப்பட்டு இருப்பதோடு, வரிக்கு வரி வித்தியாசமான உவமைகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், அனைத்து கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818