64 யோகினிகள் மர்மங்கள்
64 யோகினிகள் மர்மங்கள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலை 275ரூ..
சக்தி வழிபாட்டில் அம்பாளின் முக்கியமான பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும், மொத்தமாக 64 யோகினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கும் நூல், யோகினிகள் பற்றிய மர்மங்களை விளக்கும் ஆன்மிக ஆய்வு நூலாக விளங்குகிறது என்று கூறலாம்.
64 யோகினிகள் எனப்படுபவர்கள் யார் யார்?, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பக்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்? என்ற விவரமும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. யோகத்தல் திறன் பெற்ற ஆண்கள் யோகினிகள் ஆகிறார்கள் என்ற விளக்கத்தை தரும் இந்த நூல், கடந்த நூற்றாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த ஆனந்தம்மாள் என்ற யோகினி பற்றியும், அவர் வானத்தில் பறந்து சென்றதை தமிழ் அறிஞர் திரு.வி.க. நேரில் பார்த்து ஒரு புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்பதையும் பதிவு செய்து இருக்கிறது.
யோகினி வழிபாட்டு முறைகள், அவர்களது மர்மங்கள், யோகினி வசியம் ஆகியவை பற்றியும் தகவல்கள் தரும் இந்த நூல் அமானுஷ்மான விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களைக் கவரும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818