ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2
ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2, ஜே.வி.நாதன், அந்தரி பதிப்பகம், விலை: ரூ.300 மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.நாதன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ விருதை ஜே.வி.நாதன் மூன்று முறை பெற்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான மௌனியைப் பற்றி ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, சிநேகிதி, குமுதம் பக்தி […]
Read more