தெய்வம் நின்று கொல்லும்!
தெய்வம் நின்று கொல்லும்!, கவிமாமணி அழகு சக்தி குமரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100.
செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய் பேசி நடிக்கும் காட்சியை காட்டும் சிறுகதை, நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற திருக்குறள் கருத்தோடு கதை முடிகிறது.
ஊரார் பணத்தைக் கொள்ளையடித்தவன் விபத்தில் மாட்டி மாய்கிறான் என்ற கருத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பாதை தவறிய சிறுவனை நல்வழிப்படுத்திய பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற சிறுகதை, அனைவர் உள்ளத்தையும் ஈர்க்கும். சிறுகதை எழுத முயல்வோருக்கு வழிகாட்டியாக அமையும்.
– பேராசிரியர் இரா.நாராயணன்
நன்றி: தினமலர், 6/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818