பாரிஜாத்
பாரிஜாத், நாசிரா ஷர்மா, சாகித்ய அகடமி, விலைரூ.1150.
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத் அலகாபாதில் உள்ள பங்களாவை விற்றதிலிருந்து துவங்கி, அதை குடும்ப உறுப்பினர்கள் மீட்டெடுப்பது வரை பல நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் சொல்லப் பட்டிருக்கின்றன.
‘வாழ்வும் மரணமும் மேலே இருக்கும் இறைவனின் கைகளில் அல்லவோ இருக்கிறது’ என்று நினைப்பவளின் வாழ்க்கைப் போராட்டம் கதைப்பின்னலுக்குத் துணை செய்கிறது. முக்கிய பாத்திரங்களான நிகில், மைக்கேல், காசிம், பிர்தெளஸ் ஜஹான், எலேசன், ஷோபா நம் நினைவில் நிற்கின்றனர். ஹிந்து பண்பாடும், இஸ்லாமிய பண்டிகைகளும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.
மொழிபெயர்ப்பு எளிமையாக இருப்பது மட்டுமன்றி, மூலத்தின் சுவையை அப்படியே தந்திருப்பது வெற்றி என்று சொல்லலாம்.
– ராம.குருநாதன்
நன்றி: தினமலர், 6/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818