தேன்கூடு

தேன்கூடு, தொகுப்பு ஆசிரியர்: உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலை:ரூ.110. சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகை மிகச் சிறப்பான 100 பாடல்கள் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் தொடர்பான பல நூல்களை எழுதியவரான இந்த நூலின் தொகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், பழைய கதை புதிய பாடல் உள்ளிட்ட நூல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 100 பாடல்களும் அறிவுக்கு விருந்தாவதோடு, சிறுவர்-சிறுமிகளை வெகுவாகக் கவரும் வண்ணம் உள்ளன. நன்றி: […]

Read more

காந்தியின் பொம்மை

காந்தியின் பொம்மை, குறிஞ்சி ஞான.வைத்தியநாதன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்து, தீயவற்றை விலக்கி, எதிர்த்து போராட துாண்டும் நாவல். பள்ளி நண்பர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, வழியில் ஒரு கிளியை பாம்பு சாப்பிட முயல்வதை பார்க்கின்றனர். பாம்பிடம் இருந்து கிளியை காப்பாற்றி, பள்ளி நோக்கி புறப்பட்டால் நேரம் கடந்து விடுகிறது. தலைமையாசிரியரின் அன்பை பெறுகின்றனர். ஒரு கொலையை பார்த்தால் சிறுவர்களுக்கும் ஏற்படும் அச்சம், விசாரணை, போராட்ட குணம் என பரபரப்பாக செல்கிறது. – ராயன் நன்றி: […]

Read more

காகமும் நான்கு மீன்களும்

காகமும் நான்கு மீன்களும், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், விலை: ரூ.65. சிறுவர்களுக்கான பல நூல்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் எழுதிய 10 சிறார் கதைகளின் தொகுப்பு இது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கான நீதிநெறி போதனைகளை வழங்குகிறது. கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் கி.சொக்கலிங்கம் வரைந்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, நிவேதிதா பதிப்பகம்,விலைரூ.160. தென்னகத்தில் நாயக்கர் ஆட்சியை குறித்து சொல்லும் நுால். போர்ச்சுகீசியர்களும், மேனாட்டுப் பாதிரிகளும் தமிழகத்தில் காலுான்றிய கால கட்டமான, 17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் திருமலை நாயக்கர் 1623ல் அரியணை ஏறி ஆட்சி புரிந்தார். அவரது 35 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் நுால். தலைநகரை திருச்சியிலிருந்து, மதுரைக்கு மாற்றிய பின் அவரது ஆட்சி சிறப்புற விளங்கலாயிற்று. அந்த ஆட்சி முறையையும், கலைப் பணியையும், கோவில்கள் அமைத்த செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. குறிப்பிடத்தக்க ஐந்து போர்கள் பற்றிய […]

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.110. பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் உள்ளன. தமிழில் சிறந்த கூட்டு முயற்சியாக உள்ளது. குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான செயல். சிறுவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளே கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுக்கு, படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் பல மிகவும் உயிரோட்டமாக உள்ளன. குழந்தைகளின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த தொகுப்பு. பள்ளியில் பல நிலையில் படிக்கும் சிறுவர் – சிறுமியர், அவர்களின் […]

Read more

மகரந்தம் தூவும் மலர்கள்

மகரந்தம் தூவும் மலர்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, நிவேதிதா பதிப்பகம், விலை 130ரூ. தம்மை முழுமையாக ஈடுபடுத்தி எழுதுவதை முதன்மையாகக் கொண்டவை தன்முனைக் கவிதைகள் எனப்படுகின்றன. கவிதை உலகில் விருதுகள் பெற்ற பிரபல பெண் கவிஞர்கள் 26பேர்களின் தன்முனைக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்வியல் யதார்த்தம், தத்துவம், காதல் போன்ற பண்புகளை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

உலகெனும் வகுப்பறை

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்), எஸ்.சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக்.496, விலை ரூ.400. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், பக். 154, விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு […]

Read more

நதியோடு நாமும்

நதியோடு நாமும், இராஜேஸ்வரி கோதண்டம், நிவேதிதா பதிப்பகம், விலை 160ரூ. தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலிருந்து நல்ல பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ‘ராஜம்பாட்டி’ (இதுதான் நாவலாசிரியரின் புனைபெயர்) இந்திய நதிகளின் போக்கிலேயே தானும் பயணித்து, சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். கங்கை, ஹுக்ளி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை என இந்திய நதிகள் பலவற்றைப் பற்றியும் மனம் தோய்ந்து எழுதியுள்ளார். கங்கை பாயும் காசி பற்றி எழுதுகையில், மகாகவி பாரதியார் அங்கு வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். […]

Read more

பொய்யாமொழி

பொய்யாமொழி, முனைவர் மு. பழனிசாமி, நிவேதிதா பதிப்பகம், விலை 180ரூ கவிதைகள், கட்டுரைகள், வேளாண்மை நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற முனைவர் மு.பழனிசாமி “பொய்யா மொழி” நாவலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நல்ல தமிழில் நாவலை சுவைபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 2