கர்ம வீரர் காமராஜர்

கர்ம வீரர் காமராஜர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, ஏகம் பதிப்பகம், விலைரூ.55 தென்னாட்டு காந்தி, கர்ம வீரர், பெருந்தலைவர், கல்விக்கண் திறந்தவர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் அறியப்பட்டவர் காமராஜர். வாழும் வரை வழிகாட்டியாக திகழ்ந்தார். ஏழை எளிய மக்கள் உயர்வுக்கு உழைத்து வந்தார். இந்திய அளவில் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர். சேவையில் சாதனை படைத்த காமராஜரின் வாழ்க்கை சுருக்க வரலாறு, சிறு கையேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய தொண்டின் முக்கிய பகுதிகள் இதில் சொல்லப்பட்டு உள்ளன. அவரது வாழ்வை சுருக்கமாக அறிந்து கொள்ள […]

Read more

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, நிவேதிதா பதிப்பகம்,விலைரூ.160. தென்னகத்தில் நாயக்கர் ஆட்சியை குறித்து சொல்லும் நுால். போர்ச்சுகீசியர்களும், மேனாட்டுப் பாதிரிகளும் தமிழகத்தில் காலுான்றிய கால கட்டமான, 17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் திருமலை நாயக்கர் 1623ல் அரியணை ஏறி ஆட்சி புரிந்தார். அவரது 35 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் நுால். தலைநகரை திருச்சியிலிருந்து, மதுரைக்கு மாற்றிய பின் அவரது ஆட்சி சிறப்புற விளங்கலாயிற்று. அந்த ஆட்சி முறையையும், கலைப் பணியையும், கோவில்கள் அமைத்த செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. குறிப்பிடத்தக்க ஐந்து போர்கள் பற்றிய […]

Read more