உலகெனும் வகுப்பறை

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்), எஸ்.சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக்.496, விலை ரூ.400. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய […]

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ. உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி […]

Read more