நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ. உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி […]

Read more

ஞானம் நுரைக்கும் போத்தல்

ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன், ஆதிரை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 60ரூ. பெருங்கதையைத் திறக்கிற சாவிகள் குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. பேய்கள் மிகவும் நேர்மையானவை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பது இன்னும் […]

Read more