மகரிஷிகள்
மகரிஷிகள், ஆர்.கல்யாணி மல்லி, ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200.
அகத்திய முனிவர் துவங்கி, ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹா பெரியவர் வரை, 41 கட்டுரைகள் மகரிஷிகளின் வரலாற்றைக் கூறுகின்றன. ஆற்றல் அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது.
சிவபெருமானின் திருமணத்தின் போது இறைவன் அருளாணையின் வழி, அகத்தியர் தெற்கே வந்து பூமியை சமநிலைப்படுத்திய விந்திய மலை பூமியை ஒட்டியவாறு இருப்பது, கடல் நீர் முழுவதும் வற்றச் செய்து பருகியது போன்ற ஆற்றல்களை எளிய நடையில் விளக்குகிறது.
துர்வாசர் யார்? அவர் எப்படி வந்தார். அவர் செய்த வீர தீரச் செயல்களை, துர்வாச மகரிஷி என்னும் கட்டுரை விளக்குகிறது. காஞ்சி மகா பெரியவாளின் திவ்விய சரித்திரத்தை விரிவாகப் பேசுகிறது. பெரியவர் வாழ்வில் நிகழ்ந்த அரிய சம்பவங்களை எளிய முறையில் பதிவு செய்து உள்ளது.
– பேராசிரியர் இரா.நாராயணன்
நன்றி: தினமலர், 13/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818