வீணையடி நீ எனக்கு
வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ.
நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும்.
அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு.
வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அன்னையின் சூட்சுமவடிவம்… அன்பு தேடி ஏங்குபவர்களை அரவணைக்கும் அட்சய பாத்திரமாகவே விளங்கும் என்பதை, தன் புத்தகங்கள் வழியே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
-எம்.எம்.ஜெ.
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818