திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை
திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை, சுரேஜமீ, மணிமேகலைப் பிரசுரம், பக். 94, விலை 100ரூ.
உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன. செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழக்கப்படுவது உரை.
குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் 133 அதிகாரங்களில், அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களின் குறள்களைச் சார்ந்து தன் மாறுபட்ட எண்ணங்களை எளிய வழிபாட்டு வாசகங்களாக வழங்கியிருக்கிறார். வாய்மை அதிகாரத்தில், ‘தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னச் சுடும்’ என்ற குறளுக்கு, ‘உன்னுள் அறிந்த உண்மையை மறைத்துப் பொய் உறைத்தல் கூடாது. தவறிப் பொய் சொல்ல நேர்ந்தால், அது உள்ளுணர்வை அனலாக்கிகொண்டே இருக்கும்’ என்று விளக்கப்பட்டுள்ளது. அறம் கூறும் நூல்.
மெய்ஞானி பிரபாகரபாபு.
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818