சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம், மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,   பக்.192. விலை ரூ.200.  தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன […]

Read more