பாப்பாவுக்குப் பாட்டு
பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ.
பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது.
உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நன்றி:தினமலர், 20/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818