விடியல் தேடும் பூக்கள்

விடியல் தேடும் பூக்கள், விஜய் மேகா, ஆகாஸ் பதிப்பகம், விலைரூ.100 சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது சென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார். ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால். […]

Read more

நாற்காலிக்காரர்

நாற்காலிக்காரர், ந. முத்துசாமி, போதி வனம் ‘கூத்துப்பட்டறை’ நவீன நாடகக் குழுவை நடத்திய மறைந்த ந.முத்துசாமி, பல்வேறு நாடகங்களை எழுதியிருக்கிறார். அரசியல்வாதிகள், தேர்தல் என நமது சமூக நடப்புகளை ஆழமான விமர்சனத்துடன் அணுகும் நாடகம் இது.   நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

இரண்டு தந்தையர்கள்

இரண்டு தந்தையர்கள், சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம், பரிசல் வெளியீடு, விலை: ரூ.200. மறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் வெளியீடு, விலை: ரூ.120 இலக்கியம், நிகழ்த்துக் கலைகள் குறித்து வெளி ரங்கராஜன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இது. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டது குறித்த முதல் கட்டுரை, விருதின் நடுவர் குழுவில் இருந்த இன்குலாபின் பெருந்தன்மையைப் பற்றி அழகாகப் பேசுகிறது. நாடகங்கள் குறித்த கணிசமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல், ஒரே மாதிரியான நாடகப் போக்கை மட்டும் பிரதானப்படுத்தவில்லை. உதாரணமாக, திராவிட இயக்கங்களின் நாடகங்கள் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. வெளி ரங்கராஜன் மொழிபெயர்த்த கட்டுரைகளும்கூட இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. – கார்த்திகேயன் நன்றி: தமிழ் […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]

Read more

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC)

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC), அரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், பக்.272, விலை ரூ. 250. விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். அரவிந்தர் எழுதிய எரிக் என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் […]

Read more

யூஏஏ எனும் ஆலமரம்

யூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பான வானொலியின் கண்டுபிடிப்பு, வளர்ச்சி விரிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்று உள்ளது. நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடக ஆசிரியர்கள், அவர்களின் நாடக நூல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டாலின் எழுதிய செம்பியர்கோன் என்ற வரலாற்று வானொலி நாடகம் இடம்பெற்று உள்ளது. தொலைக்காட்சி நாடகங்கள் வரவேற்பு பெற்றுள்ள சூழ்நிலையில், வானொலி தமிழ் நாடகங்கள் பற்றிய தகவல்களை தாங்கி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நன்றி: தினத்தந்தி […]

Read more
1 2 3 4 7