நீதி: ஒரு மேயாத மான்

நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் வெளியீடு, விலை: ரூ.120 இலக்கியம், நிகழ்த்துக் கலைகள் குறித்து வெளி ரங்கராஜன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இது. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டது குறித்த முதல் கட்டுரை, விருதின் நடுவர் குழுவில் இருந்த இன்குலாபின் பெருந்தன்மையைப் பற்றி அழகாகப் பேசுகிறது. நாடகங்கள் குறித்த கணிசமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல், ஒரே மாதிரியான நாடகப் போக்கை மட்டும் பிரதானப்படுத்தவில்லை. உதாரணமாக, திராவிட இயக்கங்களின் நாடகங்கள் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. வெளி ரங்கராஜன் மொழிபெயர்த்த கட்டுரைகளும்கூட இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. – கார்த்திகேயன் நன்றி: தமிழ் […]

Read more