உடல்மொழியின் கலை
உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் வெளியீடு, விலை: ரூ.120
இலக்கியம், நிகழ்த்துக் கலைகள் குறித்து வெளி ரங்கராஜன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இது. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டது குறித்த முதல் கட்டுரை, விருதின் நடுவர் குழுவில் இருந்த இன்குலாபின் பெருந்தன்மையைப் பற்றி அழகாகப் பேசுகிறது. நாடகங்கள் குறித்த கணிசமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல், ஒரே மாதிரியான நாடகப் போக்கை மட்டும் பிரதானப்படுத்தவில்லை.
உதாரணமாக, திராவிட இயக்கங்களின் நாடகங்கள் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. வெளி ரங்கராஜன் மொழிபெயர்த்த கட்டுரைகளும்கூட இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
– கார்த்திகேயன்
நன்றி: தமிழ் இந்து, 5/10/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029820.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818