நீதி: ஒரு மேயாத மான்
நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் சந்தித்துவரும் சிக்கல்களை மையமிட்டே இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான நீதித் துறை தன் பணியைச் செய்வதில் வெளிப்படுத்தும் தடுமாற்றங்களையும் அக்கறையோடு சுட்டிக்காட்டுகின்றன.
நன்றி: தமிழ் இந்து, 9/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030964_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818