இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்
இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ.
வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம்.
விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற கதைக்களம் ஆகியவை பாராட்டும் வகையில் உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 24/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818