புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 300ரூ.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1984 செப்டம்பர் 15 -ந் தேதி, விழா ஒன்றில் திடீர் என்று மயங்கி விழுந்த போது தான் அவருக்கு எத்தகைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது என்ற தகவலை டாக்டர் எச்.வி.ஹண்டே இந்தப் புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அது முதற்கொண்டு எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை அவருக்கு என்னென்ன கோளாறுகளுக்கு என்னென்ன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? அவர், அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடல் நலம்பெற்று திரும்பியது எவ்வாறு என்பது போன்ற அத்தனை தகவல்களையும், தனது 92 -வது வயதில், சிறப்பாக நினைவுகூர்ந்து நாள் – நேரம் குறிப்பிட்டு டாக்டர் எச்.வி.ஹண்டே தந்து இருப்பது வியப்பாக உள்ளது.

எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவற்றை அவர் எவ்வாறு ஏற்றுக்கொண்டு மறுபிறவி எடுத்தார் என்ற முழு விவரமும் அடங்கியுள்ளன இந்த வரலாற்று ஆவணம், அனைவரையும் படிக்கத் தூண்டும் வகையில் உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 24/4/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *