கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பான வானொலியின் கண்டுபிடிப்பு, வளர்ச்சி விரிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்று உள்ளது. நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடக ஆசிரியர்கள், அவர்களின் நாடக நூல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டாலின் எழுதிய செம்பியர்கோன் என்ற வரலாற்று வானொலி நாடகம் இடம்பெற்று உள்ளது. தொலைக்காட்சி நாடகங்கள் வரவேற்பு பெற்றுள்ள சூழ்நிலையில், வானொலி தமிழ் நாடகங்கள் பற்றிய தகவல்களை தாங்கி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நன்றி: தினத்தந்தி […]

Read more